அண்மை செய்திகள்
தமிழ் மாநில முஸ்லீம் லீக்
தமிழ் மாநில முஸ்லிம் லீக் (TMML) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். நாங்கள் இஸ்லாமியர் சமூகத்திற்காக குரல் கொடுத்து வருகிறோம். நமது கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் ஆவார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளைக் கொண்டிருக்கிறௌம். தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி, காரைக்கால், கேரளம், கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் உள்ள தமிழ் முஸ்லிம்களைக் கொண்டு அங்குள்ள கிளைகளை நிர்வகித்து வருகின்றோம்.
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் நிலை, மது மற்றும் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிரபிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறோம். இஸ்லாமிய கலாச்சாரத்தை பாதுகாக்க போராடும் ஒரு இயக்கம் ஆகும். தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் அதிக அளவில் அரசியலில் செயல்பட வேண்டும் என்பது நம் இயக்கத்தின் கோட்பாடு ஆகும். மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் ஆதரவோடு அ.இ.அ.தி.மு.க வில் கடந்த 20 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து இஸ்லாமிய தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே தமிழ் முஸ்லிம் அமைப்பு. தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்து ஓட்டு அரசியல் அமைப்புக்கள் மத்தியில் தலைவர் ஷேக் தாவூத்தின் சிறந்த வழிநடத்தலுள் இஸ்லாமிய மக்களுக்குகாக போராடி வருகிறோம்.
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாட்கள் முதல் தமிழ் மாநில முஸ்லிம் மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் முஸ்லிம் மக்கள் அரசியலுக்கு வர வேண்டும் மற்றும் நமது சமூகத்தில் வருமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை முன்னேற்ற தலைவர் திரு. ஷேக் முகமது அவர்கள் பல நல்ல திட்டங்களை வகுத்து வருகிறார் அவருடன் இணைந்து முஸ்லிம் தமிழ் சமுகத்தை மேம்படுத்த அனைத்து முஸ்லிம்களும் தமிழ் மாநில முஸ்லிம் லீக்’கில்(TMML) சேர அழைக்கிறோம்.